Photobucket

Friday, November 25, 2011

தேசிய தலைவரின் 57ஆவது பிறந்தநாள் வாழ்த்து

ஐய நின் மேனியின் அழகதும்,
நெஞ்சினில்
அடர்ந்துள்ள வீரத்தின் அழகும்,
அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால்
அரவணைக்கின்ற பேரழகும்,
வேய்யர் கண்டு நீ வெகுண்டெழும் போதினில்
விரிகின்ற கோபத்தின் அழகும்,
விடுதலைக்கான நேர் வீதியை என்றுமே
விட்டறியாத நின் அழகும்,
பொய்யறி வின்றியே போரறிவோடெமைப்
புலியென நிமிர்த்திய அழகும்,
புவியினில் இன்றுள்ள தமிழரின் வாயெல்லாம்
பேசிடும் உன்பெயர் அழகும்
வையகம் உள்ளளவாழுக, அதுவரை
வயதுனக் காகுக அழகா.
வாயெடுத் தாயிரம் வாழ்த்துரைத்தோம், தமிழ்
வாசலில் வாழுக தலைவா.
- புதுவை இரத்தினதுரை.